Tuesday, July 21, 2009

உணர்ச்சிகள் -என் வாத்திய இசை !!

நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு சிறிய இசை முயற்சி. எண்பதுகளில் அமைந்த பாடல்களின் வடிவத்தில் இதை இசை அமைக்க முயற்ச்சித்துள்ளேன். கொஞ்சம் அஹிர்பைரவி மற்றும் ஸரசாங்கி ராகத்தின் சாயலில் பாடல் அமைந்துள்ளது..
Friday, April 24, 2009

இலங்கை': இந்தியா தவறு செய்து விட்டது: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


வலைபதிவில் ஈழம் பற்றிய செய்திகளில் தொடர்ந்து தமிழ் திரை உலகினர் நடத்திவரும் போராட்டத்தை பற்றிய அதிகம் எழுதுகிரார்கள் ஆனால் நிஜமாகவே இலங்கை சென்று அங்கு அவதிபடும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்துவருபவரை பற்றி ஒரு பதிவும் இல்லை. தட்ஸ்தமிழ் மற்றும் வின் டிவில் மட்டும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் பேட்டியை வெளியிட்டனர்.

"இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியா மிகப் பெரிய தவறை செய்து விட்டது. மிகவும் அதிகமாக நம்பிய இந்தியா தங்களை முற்றிலும் கைவிட்டு விட்டதாக இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வேதனையுடன் உள்ளனர் என்று ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், பரிவும் கொண்டவர். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சில முறை இலங்கைக்கும் சென்று வந்துள்ளார்.

அங்கு புத்த மதத் தலைவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் முன்பு சந்தித்துப் பேச முயன்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் இலங்கைக்கு மீண்டும் சென்றார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்குச் சென்று சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசினார்.

தனது இலங்கை பயணத்தை முடித்து விட்டு சென்னைக்கு வந்த ரவிசங்கர் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். இலங்கைத் தமிழர்களின் நிலை, அவர்கள் பட்டு வரும் துயரம் ஆகியவற்றை உருக்கமாக விவரித்தார். அவரது பேட்டியிலிருந்து சில பகுதிகள் ...

மனிதர்களாக இருப்பவர்கள் நிச்சயம் இலங்கையின் வட பகுதிக்கு செல்லவே முடியாது. காரணம், அங்கு காணப்படும் அவலங்களை காண மனதைக் கல்லாக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். நானும் எனது மனதை கல்லாக்கிக் கொண்டுதான் சென்றேன்.

இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் அரசு முகாம்களுக்கு நான் சென்றேன். கொண்டு சென்றிருந்த நிவாரணப் பொருட்களை தமிழ் மக்களுக்குக் கொடுத்தேன்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தைப் பொறுத்தவரையில் நமது இந்திய அரசு நிறைய செய்திருக்க முடியும், செய்திருக்க வேண்டும். நமது அரசு போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உட்கார வைத்திருந்தால், இன்று ஈழத்தில் தமிழர்கள் இந்த அளவுக்கு துயரத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.

இரும்புக் கம்பிகளால் போடப்பட்டுள்ள கம்பி வலைகளுக்கு மத்தியில்தான் தற்போதைய முகாம்கள் உள்ளன. அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது. உணவு, மருந்து, குடிநீர் என எதுவாக இருந்தாலும் பிச்சை கேட்பதைப் போலத்தான் கேட்டுப் பெற வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர் ஈழத் தமிழர்கள்.

பிச்சைக்காரர்களையே பார்த்திராத ஈழ மக்கள் இன்று மன நலம் பாதிக்கப்படும் அளவுக்கு மிக மிக மோசமான துயர நிலையில் உள்ளனர்.

அவர்களுக்கு உரிய முறையில் விரைவில் மருத்துவ வசதிகள் செய்து தரப்படாவிட்டால், அனைவரும் மன நோயாளிகளாக மாறும் பேரவலம் உள்ளது.
இந்தியா மீது கடும் அதிருப்தி..

ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்று இந்தியா மீது மிகப் பெரிய அதிருப்தி நிலவுகிறது. மிக மிக நம்பினோம் உங்கள் நாட்டை. ஆனால் இன்று எங்களை ஒட்டுமொத்தமாக இந்திய அரசு கைவிட்டு விட்டதே என்று வேதனையுடன் அவர்கள் கதறி அழுகின்றனர்.

இந்தியா தங்களை கைவிட்டு விட்டதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அதை இன்னும் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. இந்திய அரசும், இந்திய அரசியல்வாதிகளும் தங்களை கைவிட்டு விட்டார்களே என்ற வேதனையுடன் உள்ளனர் ஈழத் தமிழர்கள்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையே... ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வருத்தம்

இந்தியத் தமிழர்களாக இருக்கட்டும், ஈழத் தமிழர்களாக இருக்கட்டு்ம், உலகத் தமிழர்களாக இருக்கட்டும், நம்மிடையே ஒற்றுமை இல்லாததே ஈழப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாமல் போனதற்கு முக்கிய காரணம்.

தமிழ் பேசத் தெரிந்த தூதரே கிடைக்கவில்லையா..? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

தமிழர் பிரச்சினை சிக்கலாக இன்னும் ஒரு முக்கிய காரணம், இந்தியாவுக்கான தூதராக இலங்கையில் இருப்பவர் தமிழரல்லாதவராக இருப்பதுதான்.

தமிழே தெரியாத ஒருவரை தூதராக வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையை எப்படி இந்திய அரசு தீர்க்க முடியும்?.

தமிழ் மக்களின் வலியை, வேதனையை, உணர்வுகளை, தமிழே தெரியாத இந்திய தூதரால் எப்படி உணர முடியும்?. இது மிகப் பெரிய குளறுபடி.

இந்திய அரசு இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகப் பெரிய தவறிழைத்து விட்டது. இரு தரப்பையும் அமைதிப்படுத்த அது முயற்சிக்கவில்லை. ஒரு பக்கமாக நடந்து கொண்டதைப் போன்ற பிம்பம்தான் இப்போது ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களை பல வருடங்களுக்கு அப்படியே முகாமில் வைத்திருக்க இலங்கை அரசு திட்டமிட்டுவதாக நினைக்கிறேன்.

அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரலாமே என்று அதிபர் ராஜபக்சேவிடம் கேட்டபோது, அதற்கு பல காலம் பிடிக்கும் என்று அவர் பதிலளித்தார்.

எனது அமைப்பின் சார்பில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு மன நல ஆலோசனைகளைக் கொடுப்பதற்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.

வவுனியாவில் உள்ள அருணாச்சலம் முகாமில் மட்டும் 70 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 3 முதல் 4 லட்சம் மக்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான் வன்னிப் பகுதியில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டேன். இங்குள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர 120 மில்லியன் டாலர் தேவைப்படும். ஆனால் எங்களிடம் 20 மில்லியன் டாலர்தான் உள்ளது என்று கூறுகிறார் ராஜபக்சே என்றார் ரவிசங்கர்."

Sri Lankan situation like a human tsunami: Sri Sri
Sunday, February 22, 2009

இசை மேதை ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது!!


இந்திய இசை ரசிகர்களுக்கும் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கும் இன்று ஒரு பொன்னான நாள்.

வாழ்த்துக்கள் ரஹ்மான் சார் !!

ரஹ்மானின் இசை பற்றி 5 வருடங்களுக்கு முன்னால் நான் என் ஆங்கில வலை பதிவில் எழுதியது இப்பொழ்து மெய்யாகிவிட்டது


எல்லா புகழும் இறைவனுக்கே !!

Saturday, February 21, 2009

கஜாணனம் -என் வாத்திய இசை

அன்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் பதிவு செய்கிறேன் அதை என் இசையுடன் ஆரம்பிக்கிறேன். இந்த இசை கோர்வையை நான் வாசித்து பதிவு செய்ய எடுத்துக்கொண்ட நேரம் மொத்தம் அரைமணி நேரம்.


Gajananam | Upload Music

இசை கருவி -ரோலாந்து பாண்டம் கீபொர்ட்

Wednesday, May 25, 2005

திரை இசையில் சில ராகங்கள் - பகுதி 3

இந்த சண்டை சச்சிரவு நிறைந்த உலகத்தில் இசை ஒன்றுதான் எல்லோரையும் இணைக்கும் பாலமாகயிருக்கிறது. சங்கீதத்திற்கு எந்த வேறுபாடும் கிடையாது மொழி,மதம் தாண்டி அனைவரும் ரசிக்கும் ஒன்று.நம் சாஸ்த்ரிய சங்கீதத்தில் வரும் ராகங்களுக்கு ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களை போக்கும் சக்தி இருப்பதாக நம்ப்படுகிறது.

'Healing Power of Music' இந்த விஷயத்தை தற்பொழுது நம்மூரிலும் மற்றும் வெளிநாட்டிலும்பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பல ஆஸ்பத்திரிகளில் Music Therapy அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ராகத்திர்க்கும் ஒரு நோயை குணப்படுத்தும் சக்தியிருப்பதாக நம்ப்படுகிறது.

இந்த முறை இங்கே கோடுக்கப்பட்டுள்ள கீர்த்தனைகள் அனைத்தும் கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ( 1767-1847) அவர்கள் இயற்றியது.

சரி இந்த முறை சினிமாவில் அதிகம் உபயோகிக்காத சில ராகங்களை பற்றி பார்ப்போம்.

1) ராகம்:கவுளா
இந்த ராகத்தின்
ஆரோகணம் ஸ ரி1 ம1 ப நி3 S
அவரோகணம் ஸ நி3 ப ம1 ர்1 க3 ம1 ரி1 S

அருமையான ராகம். பூபாள ராகத்தைப்போல இதுவும் ஒரு காலை ராகம். இத மாயாமாளவ ராகத்திலிருந்து வந்த ஜன்ய ராகமாகும்.

பாடல் : துடுகள
பாடியவர் : பால முரளி கிருஷ்ணா
ராகம் : கவுளா
தாளம்: ஆதி
இயற்றிவர்: திரு தியாகராஜர்

இப்பாடல் தியாகராஜரின் மிக பிரபலமான பஞ்சரத்தின கிருத்திகளில் ஒன்று. பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த இந்த அருமையான திரைப்பட பாடலை கேளுங்கள்.
இந்த ராகத்தில் அமைந்த திரைபாடல் இது ஒன்றே,
இளையராஜாவை தவிர மற்ற இசையமைபாளர்கள் இதை ஏனோ சீண்டவில்லை. :(

பாடல்: வேதம் நீ இனிய நாதம் நீ
படம் : கோவில் பூறா
பாடியவர்: கே ஜே யேசுதாஸ்
இசை: இளையராஜா

பாடுவதற்க்கு மிகவும் சவாலான விறுவிறுப்பான பாடல், திரு யேசுதாஸ் மிகவும் அருமையாக பாடியிருப்பார்.
இப்பாடலில் வரும் வயிலின், வீணை, புல்லாங்குழல், மிருந்தங்கம், ஜலதரங்கம் மற்றும் bass guitar இத்தனை வாத்தியங்களின் கோர்வைகள்அவ்வளவு அருமை.
ராஜா சாரின் சின்ன அபிப்ப்ராயங்கள் படு ஜோர்.
தாளத்தை சமத்துக்கு (on beat) கோண்டு வந்து பிறகு அதேயே ஒன்னு தள்ளி திஸ்ரமாக மாற்றுவார்.

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

2) ராகம்: நளினகாந்தி
அரோகணம் ஸ க3 ரி2 ம1 ப நி3 ஸ
அவரோகணம் ஸ நி3 ப ம1 க3 ரி2 ஸ

இதுவும் ஒரு ஜன்யராகம், இந்த ராகம் ஸரஸாங்கி ராகத்திலிருந்து வந்தது.
மிகவும் அழகனா, 'நளினமான' ராகம் :)

பாடல்: மனுவ்யாலகிம்
இயற்றிவர்: தியாகராஜர்
தாளம்: ஆதி
பாடியவர்கள்: பாம்பே சிஸ்டர்ஸ்

தியாக ப்ரம்மத்தின் பல கீர்த்தனைகளில், மிகவும் ப்ரிபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த சினிமா பாடல்..

பாடல் : எந்தன் நெஞ்சில் நீங்காத
படம் : கலைஞன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : யேசுதாஸ், ஜானகி

பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்
[song link நன்றி
http://www.dhool.com/]

எனக்கு தெரிந்தவரை இந்த ராகத்தை சினிமாவில் முதன் முதலில் பயன்படுத்தியவர் ராஜா சார்தான்.
இந்த பாட்டின் நடுவே வரும் ஸவ்ரங்களை ராஜா சார் பாடியிருப்பார்.
கமலஹாசன் நடித்த மட்டரக படத்தில் இதுவும் ஒன்று, ஆனால் அந்த படத்தில் இப்படியோரு அருமையான 'classic' song.

திரு தேவா அவர்களும் இதே ராகத்தில் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளார்.

பாடல் : மனம் விரும்புதே

படம் : நேருக்கு நேர்
இசை : தேவாபாடியவர்: ஹரிணி

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

ஹரிணி மிக அழகிய ப்ரிஹாக்கள் எல்லாம் கோடுத்து பாடிய அருமையான பாட்டு. சிம்ரன் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் ?!
தேவா இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டில் இதுவும் ஒன்று.

3) பிலஹரி - மிகவும் கம்பீரமான ஒரு ராகம், வீரம், காதல் போன்றவற்றுக்கு சரியான ராகம்.
அரோகணம் : ஸ ரி2 க3 ப த2 ஸ
அவரோகணம் : ஸ நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ

இதுவும் ஒரு ஜன்ய ராகம், இந்த ராகத்தின் அம்மா தீர சங்கராபரணம்.
முதலில் இந்த ராக்த்தில் அமைந்த ஒரு கீர்த்தனை

பாடல் :பரித்தன மின்சித்தே
தாளம் : கண்ட சாப்பு
இயற்றியவர்: தியாகராஜர்
பாடியவர் : யேசுதாஸ்


இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த சினிமா பாடல்..

பாடல் : கூந்திலிலே மேகம் கண்டு
பாடியவர்: யேசுதாஸ்
படம் : பாலநாகம்மா

மிகவும் அற்புதமான பாட்டு. கலபடமில்லாத அக்மார்க் பிலஹரி.யேசுதாஸ் மிக அற்புதமாக பாடியுள்ளார். ஸ்வரம், ஜதி எல்லாம் இந்த பாட்டில் இருக்கும்

இதுவும் பாடுவதற்க்கு சவாலான பாட்டு.
இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்
[நன்றி http://www.dhool.com/]

பாலநாகம்மாவில் சரத்பாபு ஹீரோ, ஸ்ரீதேவி ஹீரோயின். சரத்பாபு ஹீரோவாக நடித்து ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

பாடல் : நீ ஒன்றுதானா சங்கீதம்
படம் : உன்னால் முடியும் தம்பி
பாடியவர்: யேசுதாஸ்

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

4) ராகம்: ஸ்ரீ


அரோகணம் ஸ ரி2 ம1 ப நி2 ஸ

அவரோகணம் ஸ நி ப த2 நி2 ப ம1 ரி2 க2 ரி2 ஸ


மிகவும் சுகமான, அழகான ராகம். மனம் அமைதி அடையச்செய்யும் தன்மை இந்த ராகத்திற்கு உண்டு.இதுவும் ஒரு ஜன்ய ராகம், அம்மா கரகரப்ரியா.
கர்நாட இசையில் இந்த ராகத்தில் அமைந்த மிக ப்ரிபலமான பாடல்

திரு தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனையான 'எந்தரோ மஹானு பாவலு'
பாடியவர்: திரு பால முரளி கிருஷ்ணா

இந்த பாட்டின் அடிப்படை கருத்து இந்த உலகத்தில் திறமை மிக்கவர்கள் பலர் உள்ளனர் அவர்கள் அனைவருக்கும்என்(தியாகராஜர்) சிரம் தாழ்ந்த வந்தனம்.


இப்பொது இதே ராகத்தில் அமைந்த இந்த பாட்டை கேளுங்கள்

பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்

படம் : என் சுவாசகாற்றே

பாடியவர்கள்: எஸ்பி பாலா, சித்ரா

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: சுக ராகமே

படம்: கன்னி ராசி

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

இசை: இளையராஜா

இந்த பாடலை படத்தில் ஜனகராஜ் பாடுவார்.?!!

குறிப்பு:

Carnatic music has one of the most complex thala systems among the world's music systems. Both in terms of the mathematical ranges and rhythmic varieties or thalams used, Carnatic music has no parallel.

Tala is bascially a time-measure and it is executed in cyclical pattern. concept. Therefore, it has a beginning and an end and is repeated until the composition ends.When a tala cycle is sub-divided into units of time - e.g. 4, 8, 6, 16, 9 etc. - various thalams are produced.


ஆதி தாளம் - cycle of 8 beatsNormally each beat will consist of four pulses. Because there is a spoken language of carnatic rhythm, we could say that Adi tala consists of 8 x 4 = 32 words.
Because of the thala strucutres, the role of a percussionist in Carnatic music (e.g. mridangam player) is far more intense and demanding than in any other system of music.

The percussionist in the Carnatic music system does not merely keep time and provide the basic sarva laghu (four-beats). The percusionist must go beyond time-keeping and must judiciously and dexterously bring out the mood and emotion of a composition.

Therefore, the percussionist would play a variety of mathematically-timed rhythmic patterns. This requires that the percussionist undergo significant training not only in producing various rhythmic patterns but also in developing musical acumen to know when a certain rhythmic pattern will be appropriate.

Monday, May 09, 2005

சில விளம்பர நினைவுகள்


சென்னை மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி வரும் பழைய விளம்பரங்கள் சில நினைவுக்கு வந்தன
இதோ...("ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"!!)


1) என்ன ஆச்சு குழந்தை அழுதது!! வுட்வொட்ர்ஸ் கிரைப் வாட்டர் கொடுக்க சொல்லு
2) சொட்டு நீலம் டோய் .. ரிகல சொட்டு நீலம் டோய்
3) கோபால் பல் பொடி, சிங்கை மற்றும் இலங்கையில்..(கர கர குரலில்)
4) ஏ ஒன் கிளினிங்க் பவுடர் .. பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்காங்கள் மினுமினுக்க
5) சரவணா ஸ்டோ ர்ஸ் எவர்சில்வர், பித்தளை ..
6) லைப்பாய் ஏவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே
7) மான் மார்க் குடைகள் மான் மார்க் குடைகள்
8) பொன்வண்டு பொன்வண்டு போட்டு பாருங்க வெள்ளை துணிகள் பளித்திட வைக்கும் பொன்வண்டு
9) இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸீவிடோ டுதான் வரணும்.
10) இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் பொய் இதயம் நல்ல எண்ணெய் வாங்கிட்டு வாங்கனா வாங்கிட்டு வாங்களேன்.
11) பேஷ் பேஷ் நரசுஸ் காபினா நரசுஸ் காபிதான் (உசிலை மணி)
11) ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்.
12) வந்தானே வந்தானே எக்கொலெக்ஸ் மாவீரன் வந்தானே.
13) Excuse me. நீங்க எந்த காலேஜ்? காலேஜா நானா ?!! மம்மி.. சந்தூர் சோப்
14) வஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி!! (திரை அரங்குகளில் இதை போட்டு போட்டு ,எரிச்சல கிளப்புவாங்க )
15) நிர்மா நிர்மா வாஷிங்க் பவுடர் நிர்மா...

இவ்வளவுதான் ஞாபகத்துக்கு வருது, நீங்களும் உங்க பங்குக்கு பழைய விளம்பரம் ஒன்னுத்த இஸ்து வுடுங்க ...
பெருசுங்க யாராச்சும் இத படிச்சா இன்னும் கோஞ்சம் சொல்லுவாங்கனு நினைக்கிரேன்.
இதுல உங்களுக்கு எது பிடிக்கும் எது எரிச்சல கிளப்பும்முனு சொல்லுங்க..

Thursday, April 21, 2005

திரை இசையில் சில ராகங்கள் - பகுதி 2

முந்தைய பகுதியில் நான் சில ராகங்களை குறிப்பிட்டு எவ்வாரு இசையமைபாளர்கள்அவர்கள் இயற்றும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எவ்வாரு ராகங்களை உபயோக்கித்துள்ளார்கள் என்று பார்த்தோம்.
நான் முன்பே கூறியதைப்போல திரை இசையில் சாஸ்திரிய இசைக்குண்டான மரபு எல்லாம் தேவை இல்லை. எந்த இசையமைப்பாளரும் "நான் இன்று இந்த ராகத்தில்தான் டியூன் போடுவேன்" என்று சொல்லமாட்டார். அந்த சமயத்தில் கதையில் வரும் சம்பவத்திற்கேட்ப, தம் மனதில் தோன்றும் இசைக்கேற்றவாரு டியூனை அமைப்பார்.
ராகங்களுக்கு நம் மன உணர்வை சுண்டியிழுக்கும் சக்தியூண்டு. இதை பற்றி பிறகு விரிவாக எழுதுகிரேன். சரி இப்ப ராகத்திற்கு போவோம்.


1) ராகம்: ஹம்ஸத்வனி - மிகவும் கம்பீரமான ராகம்
கர்நாடக இசையில் திரு முத்துசுவாமி தீட்ஷிதர் அமைத்த 'வாதாபி கணபதிம் பஜே' மிகவும் பிரபலமான பாடல். இந்த ராகத்தில் கணபதி/பிள்ளையார் மேல் அமைந்த நிறைய பாடல்கள் இருக்கிறது.கச்சேரிகளில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை முதலில் பாடுவது வழக்கம் (கச்சேரி களை கட்டும்).
திரை இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பிரபலம். திரு இளையராஜா இந்த ராகத்தில் பல அருமையான பாடல்களை தந்துள்ளார் அத்துனையும் 'ஹிட்'
அவற்றில் சில..

பாடல் : மயிலே மயிலே உந்தன்
படம் : கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள் : எஸ். பி பாலா., ஜென்ஸி
வரிகள் : வாலி

இந்த படம் 1979ல் வெளிவந்தது என்று நினைக்கிரேன். திருமதி ஜேன்ஸி அந்த கால கட்டத்தில் (1978-1982) பல பாடல்களை பாடியுள்ளார், அதில் முக்காவாசி ராஜா, மற்றும் திரு கங்கை அமரன் அவர்கள் இசைமைத்தவை.
பிறகு திருமதி ஜேன்ஸி திரைப்படங்களுக்கு பாடுவதை ஏனோ நிறுத்திவிட்டார்.
இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !


பாடல் : மலர்களே நாந்தஸ்வரங்கள்
படம் : கிழக்கே போகு ரயில்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

பாடல் : காலம் மாறலாம்
படம் : வாழ்க்கை
பாடியவர்கள்: எஸ். பி பாலா, வாணி ஜேயராம்

பாடல் : தேர்க்கொண்டு வந்தவன்
படம் : எனக்குள் ஒருவன்
பாடியவர் : பி சுசிலா

2) ராகம் : சுத்த தன்யாசி
இதுவும் மிக கம்பீரமான ராகம், மனத்தில் உற்சாகம் எற்படுத்த செய்யும் சக்தி இந்த ராகத்திற்கு உண்டு. காலம்காலமாக இந்த ராகத்தில் பல இசையமைப்பாளர்க்ள் பல பாடல்களை தந்துள்ளனர். இந்த ராகத்தில் அமைந்த அத்தனை பாட்டும் 'ஜாலியான' குஷியான பாடல்கள தான். இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சுப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லவும் வேண்டுமா ?

பாடல் : கண்களும் கவி பாடியதே
படம் : அடுத்த வீட்டு பெண்
வரிகள் : டி என் ராமய்யா தாஸ்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
இசை : ஆதி நாரயணராவ்

பாடல் : நீயே உணக்கேன்றும்
பாடியவர்: டி எம் செளந்திர ராஜன்
படம் : பலே பாண்டியா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

மேலே சொன்ன பாடல்கள் இரண்டிலும் ஒர் ஒற்றுமை உண்டு அடுத்து வீட்டு பெண்ணில் ராமசந்திரன் அடுத்த வீட்டு பெண்ணை மடக்க பாடுவது போல் வாய் அசைத்து நடிப்பார், தங்கவேலு இவருக்கு கொரல் கொடுப்பார், மிகவும் வேடிக்கையாக இருக்கும். பலே பாண்டியாவில் இப்பாடலுக்கு சிவாஜியும், எம் ஆர் ராதாவும் செய்யும் லூட்டியும் எந்த சிடுமுஞ்சிகாரனையும் சிரிக்க வைத்துவிடும். பாலாஜிதான் பாவம் திருட்டு முழி முழிப்பார்!! அவர் கடம் வாசிக்கிரேன் பேர்வழின்னு கடத்தை இம்சைபடுத்துவார்.
டி எம் சார் என்ன கம்பீரமாக இப்பாடலை பாடியுள்ளார்.
இதை கேட்க இங்கே சொடுக்கவும் !


இதே ராகத்தில் காலத்தால் அழிக்க முடியாத மிக அருமையான பாடலை தந்துள்ளனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். என்ன பாடலதுன்னு யோசிக்கிரங்களா?

பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

படம் : கர்ணன்
பாடியவர் : பி சுசிலா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும். !

திரு இளையாராஜா அவர்கள் இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் இல்லையா? அப்படினு யோசிகிரவங்களுக்குபதில் நிறைய !! நிறைய!!
அவற்றில் எனக்கு பிடித்த சில


பாடல் : விழியில் விழுந்து

படம் : அலைகள் ஒய்வதில்லை

பாடியவர் : இளையராஜா, சசிரேகா

வரிகள் : வைரமுத்து


இந்த படம் 1981ல் வெளிவந்தது.

மிசை முளைக்காத கார்த்திக், மற்றும் ராதா அறிமுகமான படமாச்சே இன்னிக்கும் கேட்டாலும் அலுக்காத மனதை வருடும்அருமையான ரோமாண்டிக் பாடல்.

"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" - வைரமுத்துவின் வைர வரிகள்!!
பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !

பாடல் : மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ

பாடியவர் : ஜேயசந்திரன்

படம் : கிழக்கே போகும் ரயில்

வரிகள் : முத்துலிங்கம்


இந்த படம் 1978ல் வந்தது , கிளி பேச்சு ராதிகா, அப்ப அவங்க கொஞ்சி கொஞ்சித்தான் பேசுவாங்க. ஹிரோ சுதாகர் ,அப்ப வந்த பல படங்களில் அவருதான் ஹீரோ , அப்பறம் மனுஷன் காமடியான மாறி தெலுங்கு பக்கம் பொயிட்டாரு பாவம்.இந்த பாடலை அருமையாக பாடியுள்ளார் ஜேயசந்திரன், இவரும் ஜேசுதாஸ் போல மலயாளி ஆனா இவர் தமிழ் உச்சரிப்புமிக சுத்தமாகவும், அழகாவும் இருக்கும். இளையாராஜா இசையில் பாடுவதற்கு சவாலான பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.இந்த பாடலையே எடுத்திகிட்டீங்கனா இடையில் (அநுபல்லவி) மூச்சு விடமான பாடிய பாட்டு, நீங்களும் கூடவே பாடி பாருங்க புரியும்.பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !


மேலும் வரும்.